சென்னை: போலீசார் தாக்கியதில் ரயில்வே டி.டி.ஆரும் நீச்சல் வீரருமான இளைஞர் ஒருவருக்கு கை எலும்பு முறிந்து அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களின் மனதிலும், உடலிலும் போலீசார் காலத்திற்கும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தி உள்ளனர். சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழி போராட்டங்கள் நடைபெற்றன. போராட்ட நிறைவு நாளான 23-ம் தேதி கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ரயில்வே டி.டி.ஆரான பிரேம்நாத் பனியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
கலவரம் நடைபெற்றுகொண்டிருந்த சமயத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதில் பல காயங்களுடன் கை எலும்பும் முறிந்துள்ளது. பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 நாட்கள் சிறையில் இருந்த பிரேம்நாத் நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார். நீச்சல் போட்டியில் பல பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ள பிரேம்நாத் இனி தன்னால் முன்பு போல நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியுமா என அச்சம் தெரிவித்துள்ளார். வழக்குகள் பதியப்பட்டு சிறையிலிருந்து திரும்பியிருப்பதாலும் ரயில்வே நிர்வாகம் எது போன்ற நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற அச்சம் அவரது பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது.