கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார். முதல்வருடன், எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தமிழ்நாட்டில் பருவ மழை சரியாகப் பெய்யாததால், சென்னை குடிநீர் தேவையைக் கணக்கில்கொண்டு ஆந்திர முதலமைச்சருக்கு, தமிழக அரசு சார்பாக நான் கடிதம் எழுதினேன். அதன்படி கிருஷ்ணா நதிநீர்த் திட்டத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கவேண்டிய நீரைத் திறந்து விட்டுள்ளார்கள்.
கூடுதலாக நீர் தேவைபடுகின்ற நிலை இருப்பதனால், ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர்களும் அதனைப் பரிசீலனை செய்து நமக்கு சாதகமான ஒரு முடிவைத் தெரிவித்து உள்ளார்கள்" என்றார். மேலும், ஜல்லிக்கட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், இன்னும் அதற்கான சாதகமான பதில் வந்து சேரவில்லை" என்று பதில் அளித்தார்.
English Summary :
Krishna water project, under the open water stress Tamil Nadu, Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu, chief minister of wealth O.Pannir Selvam met in person. Principal at Edappadi palanicami, Secretary Girija Vaidyanathan, who participated in the talks. Subsequently returning to Chennai, Chief minister O.Pannir Selvam wealth, Madras Airport reporters when met, "In Tamil Nadu monsoon proper...