ஐதராபாத் - நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க பல திட்டங்களை வகுத்த பிரபல நீர்பாசனத்துறை வல்லுனர் ஹணுமந்த ராவ் காலமானார்.
நிலத்தடி நீரை சேமிக்க:;
தெலுங்கானா மாநிலப் பிரிவினைக்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைமை நீர்ப்பாசன பொறியாளராக பணியாற்றிய ஹணுமந்த ராவ், தனது பணிக்காலத்தில் குறைந்த பொருட்செலவில் வேளாண் பயிர்களுக்கு உதவும் சிறப்பு நீர்பாசன திட்டங்கள் மற்றும் எளிதாக நிலத்தடி நீரை சேமிப்பது குறித்து பல திட்டங்களை உருவாக்கினார்.
உடல்நலக் குறைவு:
86 வயதான ஹணுமந்த ராவ், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிலத்தில் இயந்திரங்கள் மூலமாக போர் போட்டு நீர் எடுப்பதை விட, பழங்கால கிணறு முறையால் நிலத்தடி நீரை கணிசமாக சேமிக்க முடியும் என நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைகளுக்கு ஹணுமந்த ராவ் ஆலோசனை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Hyderabad - underground water level in the country and plans to increase the number of specialist famous Irrigation expert hanumantha Rao died