
இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர முயற்சி காட்டிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மாபெரும் தோல்வியே மிஞ்சியது. மேலும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். அவனியாபுரத்தில் மக்கள் எதிர்ப்பால் வருவாய் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இதன் பின்னரும் தனது மக்களின் உணர்வை மதிக்காமல், தங்களது கவுரவேம முக்கியம் என நினைத்து கொண்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்ய முயற்சிக்கப்பட்டது.
ஆனால் விவரம் அறிந்து தீயென கிளம்பிய அந்த கிராம மக்கள் வாடிவசாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் செய்வதறியாது திகைத்த அரசு அதிகாரிகள், முதல்வரின் உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை பீய்ச்சி அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை விரட்டியடித்தனர். இதனையடுத்து முதல்வரின் கடைசி முயற்சியும் பலிக்காததால் மாபெரும் தோல்வி முகத்துடன் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
English summary:
Madurai, Dindigul district of Tamil Nadu state to be held in the village of Kovilpatti near Innasipuram announced unilateral order has been canceled. Near Kovilpatti Innasipuram jallikattu was canceled after the struggle continues.