மதுரை : மதுரை அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இதனால் பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்தது. இது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி
நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று மதுரை அருகே உள்ள கரிசல்குளம் பகுதியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்து வருகின்றனர். சுமார் 22 காளைகளை கொண்டு இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
English Summary:
Madurai manju virattu defiance was near. Jallikattu will have to remove the ban, stressing that this year should be allowed to conduct jallikattu struggles has been held at several locations throughout the state. The young people, college students, and ordinary people have been part of a large scale.