45-வது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்புடன் தொலைபேசி மூலம் நேற்று உரையாடியுள்ளார் இந்திய பிரதமர் மோடி.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'ட்ரம்ப்புடன் நேற்று பேசியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வரும் காலத்தில் இரு நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து வேலை செய்ய உறுதி அளித்தேன். அவரை இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்துள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியுடன் உரையாடிய பிறகு, ட்ரம்ப் சார்பில் வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக இணைந்து செயல்படுவது பற்றி பேசினர். மேலும், தீவிரவாதத்துக்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும் என்பது பற்றியும் உரையாடினர்' என கூறப்பட்டுள்ளது.