வாஷிங்டன் - ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்தும் அளவுக்கு வடகொரியா வளர்ச்சி அடையவில்லை என அமெரிக்க அரசின் உள்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத சோதனை:
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதுவரை 4 முறை...:
அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு கடந்த ஆண்டுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
பொருளாதார தடை:
இதன்காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. எனினும், தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
டிரம்ப் சவால்:
இந்நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். மெரிக்காவை தாக்கும் நோக்கத்தில்தான் இதைப்போன்ற நெடுந்தூர ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருகிறது என்ற நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவது என்பது ஒருபோதும் நடக்கப் போவதில்லை என அமெரிக்க வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ட்வீட்’ செய்திருந்தார்.
செலுத்தும் திறன் இல்லை:
இந்நிலையில், அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தும் திறன் வடகொரியாவுக்கு இல்லை என அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜான் கிர்பி, ‘கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை தயாரிப்பதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிரம் காட்டி வருவதை நாங்கள் அறிந்துள்ளோம்.ஆனால், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனை அந்நாடு பெற்றுள்ளது என்பதை தற்போதைய நிலவரப்படி ஏற்றுக் கொள்வதற்கில்லை’ என்று கூறியுள்ளார். வடகொரியாவின் இத்தகைய அத்துமீறலை தட்டிக்கேட்க சீனா தவறி விட்டதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இதைப்போன்ற மதிப்பீடு எங்களுக்கு ஏற்புடையதல்ல’ என்று தெரிவித்தார்.
English summary:
Washington - North Korea's development of missiles and nuclear weapons to attack the fitting does not reach the interior of the US government, said spokesman John Kirby.