சென்னை, 3 மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷனில் பொருட்கள் வாங்காமல் இருந்தாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்று உணவு வழங்கல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு விவரங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று பொது வினியோக திட்டத்துறை கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகிறது.ஆனாலும் தமிழகம் முழுவதும் இன்னும் 40 சதவீதம் குடும்ப அட்டை தாரர்கள் தங்கள் ஆதார் எண்களை இணைக்காமல் இருந்து வருகிறார்கள்.இதனால் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தாமதமாகி வருகிறது. மீண்டும் உள்தாள் இணைக்கப்பட்டு இந்த ஆண்டிற்கு குடும்ப அட்டைகளை பயன்படுத்த உணவு வழங்கல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் ஆதார் எண்களை ரேஷன் கடைகளில் உள்ள ‘பாயிண்ட் ஆப் செல்’ மெஷினில் பதிவு செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் ஆதார் எண்களை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்கள் முழுவதும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும் அந்தந்த ரேஷன் கடைகளில் சென்று ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை விவரங்களை பதிவு செய்தனர்.ஆதார் எண்களை பதிவு செய்யாத சிலரின் குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதனால் பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விட்டதாக கருதினர். 3 மாதங்கள் பொருட்கள் தொடர்ச்சியாக வாங்கவில்லை என்றால் ரேஷன்கார்டு ரத்தாகி விடும் என்ற அச்சத்தில் ரேஷன் கடைகளுக்கும், வட்ட வழங்கல் அலுவலகத்திற்கும் அலைகிறார்கள்.
மேலும் ஜனவரி மாதத்தில் இலவச வேட்டி-சேலை, பொங்கல் பரிசு போன்றவை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும். அவை தங்களுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயமும் தற்போது எழுந்துள்ளது.பொதுமக்களிடம் எழுந்துள்ள இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உணவு பொருள் வழங்கும் துறையில் இருந்து, அதன் ஆணையர் ஒவ்வொரு வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷனில் பொருட்கள் வாங்காமல் இருந்தாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. பொது மக்கள் குழப்பம் அடைய வேண்டாம். ஆதார் எண்களை ரேஷன் கடையில் பதிவு செய்வதற்காக ஒரு சில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. ஆதார் எண்களை பதிவு செய்யாதவர்களுக்கு பொருட்கள் வினியோகத்தை நிறுத்த (ஸ்டாப் சப்ளை) அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆதார் எண் அட்டையுடன் குடும்ப அட்டையையும் கொண்டு ஒரு மனு எழுதி வட்ட வழங்கல் அதிகாரியிடம் கொடுத்தால் அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பொருட்கள் வழங்கப்படும். எக்காரணத்தை கொண்டும் ரேஷன் கார்டு ரத்து ஆகாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
However, taking in the ration of 3 months of food ration card would be canceled officer official said.