கோவை: அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவிற்கு அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. வெவ்வேறு இடங்களில் சசிகலா பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.எனினும் தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கோவை சூலூர், கண்ணம்பாடி பகுதிகளில் சசிகலாவை வாழத்தி வைக்கப்படிருந்த பேனர்களுக்கு போட்டியாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டன. காடுவெட்டிபாளையம், பாப்பம்பட்டி, கள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சசிகலா பொறுப்பேற்றதை பாராட்டி அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மேலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சசிகலா பேனர்கள் கிழிக்கபட்டுள்ளன. இதனால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுக தொண்டர்கள் கழட்டிச்சென்றனர். சசிகலா பேனர்களை கழட்டி சென்ற மர்ம நபர்களை கண்டுப்பிடிக்கும் படி போலீசாருக்கு அதிமுக தொண்டர்கள் புகார் கூறியுள்ளனர். இதே போன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் 100 வது பிறந்த தினத்தை கொண்டாடுவது எனவும் தீபா பேரவையில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
English Summary:
Coimbatore: AIADMK general secretary, who has assumed the shashikala resistance has been rising among the ranks of the party. Shashikala Banners torn in different places. After the demise of the party's general secretary Jayalalithaa has responsibility to take responsibility for the party's ministers and executives emphasized Shashikala regime coming. so shashikala resistance has been rising among the volunteers.