சென்னை : தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் தடையை தாண்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் போலீசாருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு பெருகும் ஆதரவு :
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டங்கள் ஒருபுறம் நடந்த போதிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் துவங்கியதால், கடந்த 2 நாட்களாக கோர்ட் தடையை மீறி பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வீச்சு ; போலீசார் வீரட்டியடிப்பு :
சிகவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 10,000 பேர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது, போலீசாரை சுற்றி வளைத்த பொதுமக்கள், அவர்களின் வாகனங்கள் மீது கல்வீசி, விரட்டி அடித்தனர். பின்னர் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதே போன்று மதுரை பாலமேட்டில் போலீசார் அத்துமீறி நடந்து வருவதாக குற்றம்சாட்டிய பொது மக்கள், போலீசார் வாகனங்கள் மற்றும் மினிபஸ்களின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்காததை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதால், அங்கு பதற்றம் காணப்படுகிறது.
பிற மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு :
தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நாரவாரிபள்ளி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் சுமார் 100 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டை தடுக்க வந்த போலீசாரை, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டியடித்துள்ளனர். தமிழகத்தை கடந்து தென் மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பொங்கலை முன்னிட்டு மாடுகளுடன், கொளுந்து விட்டு எரியும் தீயில் இளைஞர்கள் இறங்கும் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
English summary:
Chennai: Tamil Nadu and Andhra Pradesh also been jallikattu hurdle. In a few places, and attacks against the police.