கோவை: ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் ரேக்ளா போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டது. கொடிசியா மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர். மேலும் அமைச்சர் கார் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காலை 9 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட ரேக்ளா பந்தயங்கள் தொடர்ந்து 11 மணிக்கு மேல் நடத்தப்பட்டன. ரேக்ளா பந்தயத்தை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார். திரளான மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
மாணவர்கள் போராட்டம் :
இதற்கிடையில் அமைச்சர் வேலுமணியை சந்திக்க வேண்டும் என சில மாணவர்கள் அனுமதி கேட்டனர். இதனையடுத்து இருவரை போலீசார் அழைத்து சென்றனர். இதனால் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ரேக்ளா பந்தயத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானத்தை ஏற்க மறுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சர் காரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது
English summary:
Coimbatore: jallikkattu ordinance was issued, followed by Coimbatore rekla competition was organized by the district administration. Kodisiya the arrangements made at the stadium. The competition for students and young people in the fight involved protest. Car siege by the Minister of outrage.