சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மாணவர்கள், பொது மக்கள் தாங்களாக ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மனித சங்கிலி போராட்டம்:
மதுரை கரிசல்குளம் பகுதியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒன்று சேர்ந்த பொது மக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 கி.மீ., தூரத்திற்கு மேல் அவர்கள் வரிசையில் நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சி சோமரசன்பேட்டையில் விவசாயிகள், பொது மக்கள் ஆகியோர் ஜல்லிக்கட்டை நடத்த போராட்டம் நடத்த வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் பிரபலமான ரேக்ளா போட்டிகளை நடத்த வலியுறுத்தி கோவையில் போராட்டம் நடந்து வருகிறது. ரேக்ளா வண்டிகளுடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பெரியார் திடலில் இருந்து வேலூர் கோட்டைவரை பேரணியாக சென்ற இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை வலியுறுத்தி, தி.மு.க., சார்பில் தமிழகத்தின்பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை பாரிமுனை பகுதியில் நடந்த போராட்டத்தில், அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள், பொது மக்கள்:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 100க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டை நடத்தி வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் பேருந்து நிலையம் அருகே மாணவர்கள், பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான மதுரை அலங்காநல்லூர் பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
English Summary:
Chennai: Tamil Nadu urged to lift ban on jallikattu battle is going on in most places. Remove the ban on jallikattu Supreme Court to deliver judgment in the case, the Supreme Court has refused immediately.