சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் இடைவிடாத, அமைதியான, எழுச்சிமிகு போராட்டத்தை உலகமே வியந்து பாராட்டி வருகிறது.
குறையாத எழுச்சி:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அணி அணியாக திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டும் மழை, பனி, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல், உற்சாகமும் சிறிதும் குறையாமல் போராடி வருகின்றனர். ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்ட வரப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்த பிறகும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், ' எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம்; ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் தான் வேண்டும்; பீட்டாவுக்கு தடை வேண்டும்' எனதங்கள் பிடியை சிறிதும் தளர்த்திக் கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போராட்டக் களத்தை விட்டு நகராமல் உற்சாகமாக போராடி வருகின்றனர்.
வெளியே வந்த மனிதநேயம் :
கடந்த ஆண்டு சென்னை மழை,வெள்ளத்தின் போது இளைஞர்களிடம் வெளிப்பட்ட மனிதநேயம் தற்போது மீண்டும் வெளிப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிரமாக ரயில் மறியல் போராட்டத்தில் இறங்கினாலும், ரயிலில் இருக்கும் பயணிகளுக்கு தேவையான உணவுகள், குடிநீர் ஆகியவற்றையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வழங்கி வருகின்றனர். இதே போன்று சென்னை மெரினாவில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், போலீசாருக்கு உதவியாக இளைஞர்கள் பலரும் களமிறங்கி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.
குவியும் பாராட்டுக்கள் :
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வந்தாலும், சிறிதும் வன்முறையின்றி அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு உலக முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் சேவாக், முகம்மது கைப், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் டில்லி பெண் ஊடகவியலாளர் ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் , 'தமிழகத்தில் இரவு பகலாக நடக்கும் போராட்டத்தில் இரவிலும் பெண்கள் பயமின்றி போராட்டக் களத்தில் ஆண்களுக்கு நிகராக இருந்து வருகின்றனர். டில்லியில் நடப்பது போன்ற பாலியல் தொல்லைகள் ஏதும் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை, மாறாக பாதுகாப்பே வழங்கப்படுகிறது. தமிழகத்தை பார்த்து டில்லி பாடம் கற்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இது போன்று வெளிநாடுகளிலும் தமிழகத்தில் மாணவர்கள் அமைதியான முறையில் நடத்தும் போராட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
English summary:
Chennai: Tamil Nadu Jallikattu in support of the students running around non-stop, quiet, militant struggle, the whole world is appreciating.