சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்தில் காவல்துறையால் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டம் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் துஙவ்கியது. பேரவை கூட்டத்தில் பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். துணிச்சலான, தன்னம்பிக்கை மிக்க தலைவராக ஜெயலலிதா விளங்கியதாக குறிப்பிட்ட அவர், அவரது சாதனைகைள பட்டியலிட்டு பேசினார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அமைதி காத்த தமிழ
க மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் பேசிய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை நீங்கிவிட்டதாக அறிவித்தார். மேலும் இந்த கூட்டத்தொடரிலேயே ஜல்லிக்கட்க்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டமானது நிரந்தர சட்டமாக்கப்படும் என்றார். இளைஞர்களின் பெரும் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதாக பாராட்டு தெரிவித்தார். தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்ற அவர், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்த ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.
English summary:
Chennai: Tamil Nadu police jallikattu hectic environment that exists in the state of affairs, this year began with the first meeting of the State Assembly. Since the first meeting of the year with the text held governor. Speaking at a meeting of the Council of the Governor Vidyasagar Rao, paid tribute to the late former Chief Minister Jayalalithaa. Brave, self-confident so she has emerged as a leader, he spoke of his record list. After the death of her silent and thanked the people of Tamil Nadu.