முதல்வரின் அறிக்கையைப் பொறுத்தே முடிவு: போராட்டக் குழு
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டக் குழு அமைச்சர்களோடு நடத்திய பேச்சு வார்த்தையடுத்து, இது தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் முதல்வர் அறிக்கை வெளியிடுவார் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த அறிக்கையை பொறுத்தே போராட்டம் தொடர்பாக முடிவு செய்யபடும் என்று போராட்டகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்: அமைச்சர்கள் உறுதி
சென்னையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்ட குழுவினருடனான பேச்சுவார்த்தையில் ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பாண்டியராஜன் குழுவினருக்கு உறுதி அளித்தனர். இது தொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் விரிவான அறிக்கையை காலை வெளியிடுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெரினாவில் பரபரப்பு: அதிக அளவு போலிஸ் குவிப்பு:
ஜல்லிக்கட்டு ஆதரவாக மெரினாவில் நடைபெற்று வரும் போரட்டத்தில் இளைஞர்கள் சாலையை நோக்கி முன்னேறியதால் போலீசார் தடியடி நடத்த முயற்சித்தனர் இதனால் இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஏற்கனவே போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ் எங்கே? மெரினாவில் இளைஞர்கள் கோஷம்
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சென்னை மெரினாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் 17 மணி நேரமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் முதல்வர் எங்கே? என்ற வாசகங்களுடன் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.
போராட்ட களத்தில் ஆர்.ஜே.பாலாஜி!
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வரும் வேளையில் ஆர்.ஜே.பாலாஜி போராட்டக்களத்தில் இளைஞர்களை சந்தித்து பேசி வருகிறார். ஏற்கெனவே பாலாஜி ஜல்லிக்கட்டு ஆதரவாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் எந்த கட்சி சார்பும் இல்லாமல் நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையிலும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
விடிய விடிய போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தி வருபவர்களுடன் சென்னை மாநகர இணை ஆணையர் மனோகரன், சென்னை வருவாய் கோட்டாட்சியர் சிவருத்ரைய்யா பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித பலனும் எட்டவில்லை. போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இருப்பினும் ஜல்லிக்கட்டுக்காக விடிய விடிய போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மெரினாவில் போராட்டம் நடக்கும் பகுதியில் மட்டும் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. செல்போன் டார்ச்களை காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கலைந்து செல்லுங்கள்! காவல்துறை எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை இணை ஆணையர் மனோகரன், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துள்ளார். அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஓபிஎஸ் வர வேண்டும்!
மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று போராட்டக்கார்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இதனால், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இச்செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் பெருந்திரளான கூட்டம் கூடியுள்ளது. அரசியல் சார்பற்ற இந்த போராட்டத்தில், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி போராட்டம் செய்து கைதானவர்களை விடுவிக்கக் கோரி, முழக்குமிட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள்.
இன்று அ.தி.மு.க-வின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்த இன்னும் சற்று நேரத்தில் வர உள்ளார். இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary :
CM depends on the results of the report: Struggle Committee
Struggle Committee of Ministers' meetings in Chennai jallikattu varttaiyatuttu, the ministers said they would release a statement regarding the principal within 24 hours. The results of this report in relation to the fight depends porattakuluvinar that ceyyapatum said.
Given the pressure on the central government: ministers confirmed
Jallikattu in Chennai in connection with the negotiation team fought ministers that appropriate action is taken to hold the jallikattu tijeyakkumar pantiyarajan crew assured. Panneerselvam detailed report on this morning, the Chief Minister said that they would be releasing.