புதுடில்லி: இந்திய சுற்றுலா துறை வளர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையில் குறிப்பிட்டார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டதொடர் இன்று துவங்கியது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
சுற்றுலா துறை குறித்து அவர் பேசியதாவது:
10 சதவீதம் அதிகரிப்பு:
இந்திய சுற்றுலா துறையின் வளர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், 88 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இ - விசா:
சுற்றுலா துறையின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விசா நடைமுறையை அரசு எளிமையாக்கி உள்ளது. சுற்றுலா துறை வளர்ச்சிக்காக குறைந்த கால மருத்துவ சிகிச்சை மற்றும் வணிக சுற்றுலா போன்றவற்றிக்காக புதிய இ - விசா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இ - விசா சேவை 161 நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்:
கிட்டதட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 3 கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அளவிட முடியாத பங்களிப்பை அளித்து வருகிறார்கள். உலக நலனிலும் நம் நாட்டை கட்டமைப்பதிலும் உதவியாக திகழ்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
New Delhi: President Pranab Mukherjee, India's tourism industry growth of 10 per cent increase noted in his speech. Budget session of Parliament begins today. Lok Sabha and Rajya Sabha members who participated in the joint meeting was addressed by President Pranab Mukherjee. Regarding the tourism sector, he said: