மும்பை: மகாராஷ்ட்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. 10 மாநகராட்சிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியாத அதல பாதாளத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பா.ஜ.,வும், சிவசேனாவும், கடந்த கால வெற்றியை விட கூடுதல் இடங்களை பிடித்துள்ளது. மேலும் முக்கிய கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஜ்தாக்ரேயின் நவநிர்மாண் சேனாவும் சில சொற்ப இடங்களையே பெற்றுள்ளது. அனைத்து கட்சிகளும் பெரும் கூட்டணி எதுவும் அமைக்காமல் தேர்தலை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகளில் சிவ சேனாவும் , பா.ஜ., வும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் வெறும் 20 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. நாசிக்கில் மொத்தம் உள்ள 151 வார்டுகளில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே பிடிக்கிறது. புனே, தானேயில் காங்கிரஸ் ஒரு வார்டாவது பிடிக்குமா என்ற நிலையே நிலவுகிறது.
பொய்யாகிப்போனது:
மோடியின் சமீபத்திய 500 1000 ரூபாய் நோட்டுகள் அழிப்பு, புதிய ரூபாய் அறிமுகம் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற காங்கிரஸ் பிரசாரம் பொய்யாகிப்போனதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே மகாராஷ்ட்டிராவில் பல முறை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் இது வரை கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இது காங்கிரஸ் தன் நிலையை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்கின்றன மீடியாக்கள்.