நொய்டா: இணையதளம் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்தால் பணம் தருவதாக கூறி 6 லட்சம் பேரிடம் சுமார் ரூ.3,700 கோடி மோசடி செய்த பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரு கிளிக்கிற்கு ரூ.5:
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அப்ளேஸ் இன்போ சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை துவக்கிய அனுபவ் மிட்டல் என்ற பிடெக் பட்டதாரி, இணையதளம் ஒன்றை துவக்கி, உறுப்பினராக வருமாறு அழைப்பு விடுத்தார். அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால், ஒவ்வொரு முறையும் ரூ.5 கிடைக்கும் என அவர் கூறியதை கேட்டு சுமார் 6 லட்சம் பேர் இணைந்தனர்.
இதற்காக அவர்கள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் செலுத்தியுள்ளனர். இதற்காக தனியாக சர்வர் ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அவர்களுக்கு மொபைல் மூலம் அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்த போது, பணம் செலுத்தியவர்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்திற்கு சென்றதே தவிர பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதற்காக அவ்வபோது இணையதளத்தின் பெயரை மாற்றப்பட்டது.
இவ்வாறு, 6 லட்சம் பேரிடம் பணம் பெற்று சுமார் ரூ.3,700 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அனுபவ் மிட்டல் மற்றும் அவருடன் இருந்த எம்.பி.ஏ., பட்டதாரி உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர். நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், 250 பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்தனர். ரூ.500 கோடி அளவுக்கு வங்கிப்பணமும் முடக்கப்பட்டுள்ளது.
English Summary:
Noida: web by clicking the link for payment of about Rs 3,700 crore promising 6 lakh cases of fraud, police arrested 3 people, including the engineer.