புதுடில்லி: சிவோட்டர்ஸ் - ஹப்பிங்டன் போஸ்ட் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. கோவாவில் இழுபறி நிலை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கோவாவில் ஆம் ஆத்மியால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரியவந்துள்ளது.
காங்.,கை விட அதிக ஓட்டு:
இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 63 இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் எனவும், அக்கட்சிக்கு 43 இடங்கள் கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள அகாலிதளம் - பா.ஜ., கூட்டணிக்கு வெறும் 11 இடங்களே கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மல்வா பகுதியில் ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள் கிடைக்கக்கூடும் என்பதும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. பஞ்சாபில், ஆம் ஆத்மிக்கு 36.8 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுக்களை விட 3.7 சதவீதம் அதிகம் ஆகும். அதேநேரத்தில் அடுத்த முதல்வராக காங்கிரஸ் கட்சியின் அம்ரீந்தர் சிங் வர வேண்டும் என அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இழுபறி:
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு 15 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 14 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்றவர்கள் 9 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த முதல்வருக்கான ஆதரவு, தற்போது முதல்வராக இருக்கும் லஷ்மிகாந்த் பர்சேகருக்கு அதிகமாக உள்ளது.
English summary:
NEW DELHI: civoters - daily combination happintan Post poll, will get more seats in Punjab, according to the AAP. It said that in Goa lasts dilemma. Will not be affected, according to the AAP in Goa.