
மக்கள் வெறுப்பு:
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: சட்டசபையில் இது வரை ரகசிய வாக்கெடுப்பு நடந்ததில்லை. தமிழக சட்டசபையில் நடந்த சம்பவத்திற்கு, சபாநாயகரும் தி.மு.க.,வும் தான் பொறுப்பு. இது தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., வின் செயல்களால், மக்கள் வெறுப்புடன் உள்ளனர்.
வாடகை சேர்:
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி பதவி, வாடகை சேர் போன்றது. சட்டசபையில், ஸ்டாலின் தாக்கப்பட்டது குறித்து, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். தமிழகத்தில், 'நீட்' தேர்வு குறித்தோ, மாணவர்கள் நலன் குறித்தோ, கழகங்களுக்கு அக்கறையில்லை. அரசு பள்ளிகளை மூடிவிட்டு, தனியாருக்கு தாரை வார்க்கும் நிலை உள்ளது. ஜாதி, மதம், மாநிலம் என்ற பெயரில் அரசியல் செய்வதை மாற்ற வேண்டும். நமக்கு தேவை நல்ல தலைவர்கள் தான் தவிர, எண்ணிக்கை கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.