கோல்கட்டா : மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிவுரை தருவதை விடுத்து, அதற்குத் தேவையான நிதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
வாய் ஜாலம் வேண்டாம்:
கோல்கட்டாவில் நடந்த கிராமப் பஞ்சாயத்து சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கிராமப்புறங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை. வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை கூறி வருகிறது; அதற்கு தேவையான நிதியை, முதலில் ஒதுக்க வேண்டும்.
செயலில் வேகம்:
வாய் ஜாலம் காட்டுவதை விட, செயலில் வேகம் காட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம். கிராம பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருவது, மாநில அரசுகள் தான். மாநிலங்களில் மத, இனக் கலவரங்கள் ஏற்படுவதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
KOLKATA: providing advice on the development plans of the state government, leaving the government to take action to provide the necessary funds to West Bengal Chief Minister Mamata Banerjee said.