சென்னை: சட்டசபையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது: மக்கள் கருத்தை கேட்டு மற்றொரு நாளில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும். கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். மக்கள் கருத்தை கேட்க அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். மக்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நட்ராஜ் கோரிக்கை:
சட்டசபையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியதாவது: மக்களை சந்திக்க எம்.எல்.ஏ.,க்களை அனுமதிக்க வேண்டும். மக்களின் கருத்து கேட்ட பிறகே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.