திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி யாக சால பூஜைகள் விமர்சையுடன் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து வரும் 6-ம் தேதி மீண்டும் குடமுழுக்கு நடக்கவுள்ளது. இதையொட்டி கோயிலின் 5-ம் பிரகாரத்தில் யாக சால பூஜைகள் விமர்சையுடன் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், விநாயகர், முருகர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் 300 சிவாச்சாரியார்கள் பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
குடமுழுக்கை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துவருகிறது. புனித நீர் பக்தர்கள் மீது பட வேண்டும் என்பதற்காக கோயிலில் 23 இடங்களில் நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குடமுழுக்கையொட்டி மாநிலம் முழுவதிலுமிருந்து திருவண்ணாமலைக்கு 1800 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாதுகாப்பு பணிக்கு 3 ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தலைமையில் மொத்தம் 5000 காவலர்கள் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
English Summary:
Tiruvannamalai :Tiruvannamalai temple of Lord Shiva is the excellent festival
reform is underway with the critically celebrated. Annamalayar Thiruvannamalai temple was the last reform in 2002. After that comes 14 years after the reform will take place again on the 6th. In the courtyard of the temple, the remarkable level of the 5th, beginning with the critically celebrated, are underway. Annamalayar, unnamalaiyamman, Ganesha, the ramps are set separately for the gods 300 Sivachariyar thugs are conducting pujas.