எர்ணாகுளம் : நடிகை பாவனா கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பல்சர் சுனில்குமார், எர்ணாகுளம் கோர்ட்டில் சரணடைய வரும்போது கைது செய்யப்பட்டார்.
காரில் கடத்தல் :
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பாவனா. பாவனா படப்பிடிப்பு ஒன்று திருச்சூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் பிப்ரவரி 17 ம் தேதி இரவு 10.30 மணியளவில் திரும்பி கொண்டிருந்தார். கார், அங்கமாலி அருகே சென்றபோது, இன்னொரு காரில் வந்த மர்ம கும்பல், திடீரென பாவனாவின் காரை வழி மறித்து, அவரது காரில் ஏறிக்கொண்டனர். அதோடு காரை நிற்காமல் ஓட்டும்படி டிரைவரை மிரட்டியுள்ளனர். பின்னர் அந்தக்கும்பல் பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதோடு, அதை மொபைல்போனில் படமும் பிடித்துள்ளனர்.
பின்னணியில் யார்? :
கார், பாலாரிவட்டம் அருகே வந்தபோது, அந்தக்கும்பல் காரை நிறுத்தி தப்பி ஓடிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போன பாவனா, அருகில் இருந்த ஒரு இயக்குநரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்தபடியே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாவனா கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது முன்னாள் கார் டிரைவர் மார்டின் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த கடத்தல் பின்னணியில் சினிமா பிரபலங்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது.
முக்கிய குற்றவாளி சரண் :
பாவனா கடத்தல் விவகாரத்தில் 5 முதல் 7 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு வந்த பல்சர் சுனில்குமார், இன்று (பிப்ரவரி 23) எர்ணாகுளம் கோர்ட்டில் சரணடைய வந்தான். அப்போது போலீசார் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பாவனா கடத்தல் சம்பவத்திற்கு பிறகு, சுனில்குமார் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.