புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள், பணமில்லா பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பல சலுகைகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பணமில்லா வரிவர்த்தனைக்கு சலுகைகள் : கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவை மூலம் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க பல சலுகைகள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரி (சரக்கு மற்றும் சேவை வரி) : வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்து மாநில அரசுகள் எவ்வளவு வரி வருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் வெளியாகலாம். நாடு முழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி : வருமான வரியிலும் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும் என்றும், வருமான வரியின் உச்சவரம்பும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கார்ப்பரேட் வருமானவரி பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.
ரயில்வே மற்றும் விவசாயம் : ரயில்வே பட்ஜெட், பொது-பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த இரு பட்ஜெட்டுகளும் ஒன்றாக தாக்கல் செய்வதால் ரயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றாலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ரூபாய் நோட்டு வாபசால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கஷ்டத்தை குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர், டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் மற்றும் உற்பத்திதுறை : பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பை பெருக்க அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம் எனவும், வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம் எனவும், சீனாவைப் போல தொழிற்சாலைகளுடன் கூடிய, தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய முதலீடு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் : வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள் மற்றும் சலுகைகள் அளிக்கப்படலாம் எனவும், அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை பெறுதல், வரிச்சலுகையை 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும்.
English Summary:
New Delhi: Union Finance Minister today to file taxes in the federal budget, the significance of cashless transaction is expected to deliver several benefits to having the opportunity to be featured.