சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று (பிப். 16 ம் தேதி ) பதவியேற்றது. முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி , உள்துறை , நிர்வாகம், வருவாய் , பொதுப்பணி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனிப்பார்.முதல் வரிசையில் சசிகலா சகோதரர் திவாகரன் , தினகரன் , தம்பித்துரை உள்ளிட்டோர் இருந்தனர். பதவியேற்பில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயர் பட்டியல் வாசித்தார்.
பதவியேற்ற பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், தினகரன் உள்ளிட்டோர் மெரினாவில் உள்ள ஜெ., மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
English summary:
Chennai: Tamil Nadu Chief Minister Edappadi Palanichany led 31-member cabinet on Friday (Feb. 16) took control. Everyone, including the governor, CM Rao was sworn into office. CM Edappadi Palanichany, finance, interior, administration, revenue, and more than 10 key sectors, including public take notice.