டேராடூன் - உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
கடும் போட்டி:
உத்தராகண்டில் 69 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 15-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்த லின்போது ஆ
ளும் காங்கிரஸுக் கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நிலையான ஆட்சி:
இந்நிலையில் முதல்வர் ஹரீஷ் ராவத், டேராடூனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 15-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியாக மக்கள் வாக்கு அளித்ததற்கு நன்றி. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். மாநிலத்தில் நிலையான ஆட்சியை காங்கிரஸ் வழங்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பணத்தை நம்பி போட்டியிட்டது. அந்தக் கட்சி தோல்வியைத் தழுவுவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.