சென்னை: ''மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்களிக்க, சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு, என் பாராட்டுகள்,'' என, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
பாராமுகம்:
அவரது பேட்டி: மத்திய பட்ஜெட், ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என, ஏற்கனவே அறிவித்ததை நிறைவேற்றவில்லை. வறட்சி நிவாரண நிதி வழங்குவதில், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. சர்க்கரை மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். மண்ணெண்ணெய்க்கு மாதந்தோறும், 10 காசு விலை உயர்த்துவதையும், பா.ஜ., அரசு கைவிட வேண்டும்.
பாராட்டு:
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும், 'நீட்' சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றிய, முதல்வருக்கு பாராட்டுகள். தமிழக அரசின் சட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: '' From the medical entrance examination, the state exemption, the bill passed by the Chief Minister, my hats off 'to', TN Cong., Chairman Tirunavukkarasar said.