புதுடில்லி: மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின் ஜெர்மன் போர் விமானங்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அச்சம்:
கடந்த 16ம் தேதி(வியாழக்கிழமை) மும்பையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது. இதில் 330 பயணிகளும், 15 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் ஜெர்மனியின் கலோன் நகருக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவானது.
போர் விமானங்கள் துணையுடன்..:
இதனையடுத்து ஜெர்மனியின் போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை நோக்கி விரைந்து, அதனைச் சுற்றி வளைத்தன. சில நிமிடங்களுக்கு பின் கட்டுப்பாட்டு அறையுடன் விமான தொடர்ப்பு கிடைத்தது. இருப்பினும் விமானத்தை பாதுகாப்பாக ஜெர்மன் போர் விமானங்கள் அழைத்து சென்றுள்ளன. போர் விமானங்களின் துணையுடன், இந்திய விமானம் பயணிக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.