சென்னை: தி.மு.க., எம்.பி.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். நேற்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, நடந்த பிரச்னை தொடர்பாக கவர்னரிடம் எம்.பி.,க்கள் புகார் அளித்தனர்.
கடிதம்:
இந்த சந்திப்பை தொடர்ந்து திருச்சி சிவா பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்; சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி இல்லாமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது முரண்பாடாக உள்ளது. போலீசார், சட்டசபை அவைகாவலர்கள் போல் வேடமணிந்து உள்ளே வந்தனர். இது தொடர்பான ஆதாரத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளோம். சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். அதனை கவர்னரிடம் வழங்கியுள்ளோம். கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கவர்னர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
DMK MPs met Governor Vidyasagar Rao. Trichy Siva, tikees. Mr.R.S barathi met with the governor. During the last assembly poll in the faith, to the governor on the issue of MPs had complained.