சென்னை: சசிகலாவுக்கு எதிராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் போர்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு ஆங்கில சேனலில் வெளிவந்த தகவல்:
சசிகலா வாரிசு அரசியலில் ஈடுபட்டுள்ளது ஜெ., அண்ணன் மகன் தீபக்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் செய்யப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லம் தனக்கும் தனது சகோதரி தீபாவிற்கும் சொந்தமானது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நல்லவர்; முதல்வராக அவர் சிறப்பாக செயல்பட்டார் . துணை பொதுசெயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது. ஆனால் சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.