சென்னை: சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
நடந்தது என்ன?
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன், வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யா இளவரசனை பிரிந்து, தாயுடன் சென்ற நிலையில், கடந்த, 2013 ஜூலை, 4ல், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்னால் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசன் இறந்து கிடந்தார்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதை ஏற்று, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.