நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக கவர்னரை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் வெற்றிபெற்றதற்கான வீடியோ ஆதாரங்கள்,மற்றும் அறிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.
அதிமுக அரசு வெற்றி :
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் அமைச்சர்கள் சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்த விபரங்களை வீடியோ ஆதாரங்களாகவும் அறிக்கையாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னரிடம் வழங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அமைச்சர்கள் :
இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் உடன் சென்றிருந்தனர். கவர்னருடன் சுமார் 30 நிமிட நேரம் சந்தித்து பேசிய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கவர்னர் புறப்பட்டார்:
இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆர். எஸ். பாரதி, டி.கே. எஸ். இளங்கோவன் ஆகியோர் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும் , சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் கவர்னரிடம் மு.க. ஸ்டாலின் சார்பாக நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களுடம் கவர்னரைச் சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார். தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதால் காலையிலேயே அரசியல் தலைவர்களை சந்தித்து பேசிய பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றுமாலை மும்பை புறப்பட்டுச் சென்றார்.