சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 134 பேருக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி கொறடா ராஜேந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நாளை(18 ம் தேதி) சட்டசபைக்கு வர வேண்டும்.
இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே இன்று (வெள்ளி) மதியம் 3 மணிக்கு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார்.