சென்னை: விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல் விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை என விஜயகாந்த் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சாலை, ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கியதற்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்பார்த்த அறிவிப்புக்கள் பட்ஜெட்டில் இடம்பெறாததால் மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை தந்துள்ளது என விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியது தவறு என விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்தது எனவும் விஜயகாந்த் கூறினார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு நல்ல பெயர் வாங்க நினைத்த நேரத்தில் தமிழக அரசு முந்தி கொண்டது. இதேபோல் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்ததாக வாட்ஸ் அப், ஊடகங்களில் நான் பார்க்கவில்லை என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
English summary:
Chennai: The farmers are disappointed with the lack of notification in the budget to address the issue, said that the escalator leader Vijayakanth. Similarly, for agricultural development projects that are not in the budget tabled yesterday Vijayakanth commented on the federal budget. The road and railway construction, said the Development Fund for taking Vijayakanth reception. However, the budget was not at the expected announcements that the federal budget has been disappointing Vijayakanth commented.