புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி, நன்கொடை மூலம் பெற்ற வருமானம் குறித்து தாக்கல் செய்த கணக்கு அறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக, தேர்தல் கமிஷனிடம் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், அந்த கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வருமான வரித் தாக்கல்:
டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். அரசியல் கட்சிகள், தங்கள் வருமானம் மற்றும் அந்த வருமானம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை மூலம், 27 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அக்கட்சியின் வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான கணக்கு:
'கடந்த, 2013 - 14 மற்றும் 2014 - 15 ஆண்டுகளில், ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த நன்கொடை வருவாயும், அந்த கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையும் சரியாக பொருந்தவில்லை' என, வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு அறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகவும், முன்னுக்குப் பின் முரணான விபரங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் வருமான வரித்துறையினர், தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது; இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெற்றி உறுதி:
இதுகுறித்து கெஜ்ரிவால் தெரிவித்ததாவது: பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தல்களில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. அந்த பயத்தில் தான், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, எங்கள் கட்சியை முடக்க நினைக்கிறது. இது போன்ற கீழ்த்தர அரசியலில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. இத்தகைய நடவடிக்கைகளால், நாங்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: AAP, tabled by donating the income statement over the muddle that, to the income tax, according to the Election Commission. Thus, there is the risk of that party's approval will be canceled.