சென்னை: ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்ந்தது முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் பிரதமர் வரை தமிழகம் வந்து சென்றனர். ஜெ.,மறைவு , மர்மம் ஒரு பக்கம், அடுத்த முதல்வர் யார் என்ற செய்திகள் பரவிட கவர்னர் தமிழகத்தின் முழு பணியில் இறங்க வேண்டியதாயிற்று.
ஓ.பி.எஸ்., போர்க்கொடி :
தமிழக அரசியலில் அடுத்து சசி முதல்வராக வேண்டும் என காய் நகர்த்தி அவர் அதிமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் அப்போது மாநிலத்தில் இல்லை. அவர் வருவாரா, என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது கவர்னர் கடந்த 9ம் தேதி மும்பையிலிருந்து சென்னை வந்தார். சசி பொறுப்பேற்கவிருந்த நேரத்தில் ஓ.பி.எஸ்., சசிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் மேலும் பரபரப்பு தொற்றியது. அந்த நாள் முதல் கவர்னர் மாளிகை எப்போதும் பரபரப்பாகவும், பிஸியாகவும் இருந்தது. காலை, மாலை, மதியம் என ஓ.பி.எஸ்., ஸ்டாலின், சசிகலா, சுப்பிரமணிய சுவாமி, இடைப்பாடி பழனிசாமி, தலைமைசெயலர், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினர்.
கவர்னர் மாளிகை நோக்கி கவனம்:
தொடர்ந்து, அடுத்து யார் ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கவர்னர், சசி ஆட்சி அமைக்க உரிமை கோரியும் அவரை அழைக்கவில்லை. பொறுமையாக இருந்தார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் அனைவரது கவனமும் கவர்னர் மாளிகை நோக்கி திரும்பியது. சுப்ரமணியன்சாமி முதல் பலர் கவர்னரை விமர்சிக்க துவங்கினர். கவர்னர் எடுத்த முடிவு சரியானது என்றும், மறு தரப்பினர் தவறானது என்றும் கருத்து தெரிவித்தனர்.
சிறைக்கு சென்ற சசிகலா :
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியானதை அடுத்து கவர்னர் முடிவு சரியானது என பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து அவசர, அவசரமாக கூவத்தூரில் இடைப்பாடி பழனிசாமி சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 15 ம்தேதி சசி சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஆட்சி அமைக்க இடைப்பாடி உரிமை கோரினார். 16ம் தேதி தமிழக முதல்வராக இடைப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவர்னரின் உத்தரவுப்படி பழனிசாமி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து நேற்று ( 18 ம்தேதி) சட்டசபை சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் அமளி, ரகளைக்கு மத்தியில் பழனிசாமி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டாலின், சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சட்டை கிழிப்பு நடந்தது.
இதனையடுத்து இன்று (19 ம் தேதி ) காலை முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, திமுக மற்றும் ஓ.பி.எஸ்., தனித்தனியாக கவர்னரை சந்தித்து தங்கள் பக்கம் நியாயங்களை எடுத்து கூறினர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு, கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 1 மணிக்கு மும்பை கிளம்பி சென்றார்.
மீண்டும் எப்போது வருவார் ?
எது எப்படியோ ஒரு வாரத்தில் தமிழகத்தின் தலைவிதி, பதட்டம் என எல்லாமே கவர்னர் பக்கமே அதிக பொறுப்பு இருந்தது என்பதை காட்டுகிறது. கவர்னர் ராவ் உள்துறை இணை அமைச்சராக இருந்து பல்வேறு அநுபவங்களை கண்டவர் என்பதால் தமிழக அரசியல் சூழலில் நல்ல முடிவை எடுத்து பிரச்சனைகளை இப்போதைக்கு சுமுகமாக முடித்து வைத்துள்ளார். அவர் மீண்டும் எப்போது வருவாரோ என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.