புதுடில்லி: சாரதா சிட்பண்ட் தொடர்பான பண மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மதாங் சிங்குக்கு சொந்தமான டில்லியில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சிறை:
மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று அதை திருப்பி தராமல், பல கோடி ரூபாய் மோசடி செய்த, சாரதா சிட்பண்ட் வழக்கில், காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர், மதாங் சிங் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
முடக்கம்:
இந்த வழக்கு தொடர்பாக, அவருக்கும், அவரது முன்னாள் மனைவிக்கும் சொந்தமான, டில்லியில் உள்ள, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. இதையும் சேர்த்து, இந்த வழக்கில், இதுவரை, மதாங் சிங்குக்கு சொந்தமான, 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
English summary:
NEW DELHI: In the case of money laundering related to the Sharada sitfunds, former Federal Minister mathan Singh owned properties worth Rs 100 crore in Delhi, disabled enforcement.