புதுடில்லி: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 1,050 கிராமங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலவச வைபை:
சமீபகாலமாக இந்தியா டிஜிட்டல் புரட்சியை கண்டு வருகிறது. மத்திய அரசும் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தி வரும் டிஜிட்டல் பணபரித்தனை பல்வேறு இடங்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 1,050 கிராமங்களில் இலவச வைபை வசதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
62 மில்லியன் டாலர்:
இந்த வைபை வசதி மூலம் கிராம மக்கள் தங்கள் செல்போன்களில் இன்டர்நெட் வசதியை இலவசமாக பெற முடியும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ‛டிஜிட்டல் வில்லேஜ்' என பெயரிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூகுளுடன் ஒப்பந்தம்?
ஏற்கனவே கூகுள் நிறுவனத்துடன் இணைத்து ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச வைபை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தையும் அந்த நிறுவனம் மூலமே செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
English summary:
NEW DELHI: Digital India 1,050 villages under the scheme, the government has decided to establish a free WIFI facility.