
மூன்று கேள்விகள்:
கடிதத்தில் மூன்று கேள்விகளை பாண்டா எழுப்பியிருந்தார்.
1. காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று குற்றவாளிகளை தேடுவதற்காக டில்லி போலீசார் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தனர். 2. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். 3. இறுதி குற்றப்பத்திரிக்கையும், (பைனல் சார்ஜ் சீட்) மற்றும் கோட்சேவை தூக்கிலிடும்படி கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறிப்பும் எங்கே.
ஆவணங்கள் இல்லை:
இதற்கு பதில் அளித்த தேசிய ஆவண காப்பகம், மத்திய தகவல் ஆணையத்தை தொடர்பு கொண்டது. அந்த ஆணையம் குறிப்பிட்ட அந்த ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று கூறி உள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறுகையில், ‛குறிப்பிட்ட தகவல்கள் குறித்து மத்திய தகவல் ஆணையம் எந்த விபரத்தையும் கூறவில்லை,' என்று தெரிவித்துள்ளார்.