
12 கிலோ தங்கம்:
அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இந்த தங்கம் குட்லக் ராஜேந்திரனுடையது என பிடிபட்ட காரின் டிரைவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் குட்லக் ராஜேந்திரனின் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் வீடு சோதனையிடப்பட்டது.
அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது, குட்லக் ராஜேந்திரன் அவர் வீட்டு எதிரிலேயே தப்பி ஓடி, தடுக்கி விழுந்து இடது கையை முறித்துக் கொண்டார். அவருக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவுக் கட்டு போடப்பட்டது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.