பெங்களூரு: சாலை விபத்தில் படுகாயமடைந்து போராடிய வாலிபருக்கு உதவாமல், பொது மக்கள் தங்களது போன் மூலம் போட்டோ, வீடியோ எடுத்தததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உதவ யாருமில்லை:
கர்நாடக தலைநகர் பெங்களூருவிலிருந்து 300 கி.மீ., தூரத்தில் உள்ளது கோப்பால். இங்கு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அலி என்ற 18 வயது வாலிபர் மீது அரசு பஸ் மோதி, அவர் மீது ஏறி சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சாலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடியபடி சுமார் 25 நிமிடங்கள் கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த மக்கள், அவரை தங்களது மொபைல் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்தனரே தவிர உதவிக்கு யாரும் வரவில்லை.
அவர் உதவி செய்ய கதறியும் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதன் பின்னர் அவர் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் மரணமடைந்தார்.
ஆதங்கம்:
சம்பவம் தொடர்பாக அவரது சகோதரர் ரியாஸ் கூறுகையில், அலிக்கு உதவ யாரும் வரவில்லை. அவர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். யாராவது உதவி செய்திருந்தால், எனது சகோதரர் உயிர் பிழைத்திருப்பார். சாலையில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கிடந்ததாக தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், விபத்தில் படுகாயமடைந்த ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர். இதனால் அவர்களுக்கு யாருக்கும் எப்படி உதவுவது என தெரியவில்லை எனக்கூறினார்.
2வது சம்பவம்:
பெங்களூருவில் தற்பாது நடந்தது 2வது சம்பவம் ஆகும். கடந்த 3 நாளுக்கு முன்னர், 38 வயது போலீஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவருக்கு உதவாமல் போட்டோ எடுத்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது இது நடந்துள்ளது. இதேபோல், கடந்த வருடம் பெங்களூருவிலும் டிரக் மீது பைக் மோதியதில் வாலிபர் உயிருக்கு போராடினர். அவர் உதவி கேட்டு கதறிய போதும், உதவாமல் போட்டோ எடுத்தனரே தவிர உதவ யாரும் முன்வரவில்லை.
English Summary:
Bangalore: For the young men who fought were injured in a road accident is reduced, usually by their phone Photo & Video took, he died miserable.