
கேள்வி:
முன்னதாக, சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.,க்கள் வேலூர் சிறைக்கைதிகள் போல் அழைத்து வரப்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் என்ன சிறைக்கைதியா எனவும் கேள்வி எழுப்பினார்.
நடவடிக்கை:
தி.மு.க.,வின் துரைமுருகன் பேசுகையில், ஸ்டாலின் காரை போலீசார் சோதனை செய்தது ஏன்? சோதனை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனை குறித்து விளக்கமளிக்க வேண்டும். அசாதாரண சூழல் நிலவுவதால் அனைவரும் பேச வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது பேசிய சபாநாயகர் தனபால், உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்