புதுச்சேரி : நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னராக இருக்க வேண்டும் என அமைச்சர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்க என்னால் முடியாது என புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
கவர்னர் மீது புகார் :
புதுச்சேரியில் கவர்னர் மற்றும் அரசுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அமைச்சர்கள் அனுப்பும் பல கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதில்லை. இதனால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என டில்லி சென்று ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.
ரப்பர் ஸ்டாம்ப் கவர்னரல்ல :
இந்த புகார் தொடர்பாக கவர்னர் கிரண்பேடியிடம் கேட்ட போது, முந்தைய கவர்னர்களை போல் நான் செயல்படுவதில்லை. எனக்கு அனுப்பப்படும் கோப்புகளை மிகவும் கவனமாக ஆய்வு செய்வேன். அதில் குறைகள், தவறுகள் இருக்கும் பட்சத்தில் திருத்தம் செய்ய திருப்பி அனுப்புவேன். திருத்திய பின்னரே ஒப்புதல் அளிப்பேன். நான் ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டும் என அமைச்சர்கள் விரும்புகின்றனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். இப்போது இதனை அமைச்சர்கள் மறுக்கலாம். ஆனால், அதற்கு என்னிடம் தகுந்த ஆதாரம் உள்ளது.
அமைச்சர்கள், நான் அதிகாரிகள் இட மாற்றத்துக்கு கூட ஒப்புதல் அளிக்கவில்லை என குறை கூறுகின்றனர். உண்மையில் எந்த கோப்பும் தேங்கி இருக்கவில்லை. நான் முதல்வருக்கே அனுப்பி விட்டேன். அதற்கான பட்டியல் என்வசம் உள்ளது. கடந்த 4 மாதங்களாக துறை ஒதுக்கப்படாமல் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி காத்திருக்கிறார். மற்றொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒரு வருடமாக காத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.