புதுடில்லி : இந்தியா-பாக்., எல்லையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நவீன வேலிகள்:
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: பாக்., பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. எல்லைகளிலுள்ள வேலியை வெட்டிவிட்டு பயங்கரவாதிகள் ஊடுருவுகின்றனர். இதனைத் தடுக்க இந்திய-பாக்., எல்லையில் ‛சென்சார்', கண்காணிப்பு கேரமாக்கள், ‛ரேடார்' உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வேலிகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும். இதற்காக நவீன வேலிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிறைவடையும் நிலையிலுள்ள தயாரிப்பு பணிகள் முடிந்ததும், அதனை எல்லையில் பொருத்தும் பணிகள் துவங்கப்படும்.
அடுத்த ஆண்டு:
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் பரவிக் கிடக்கும் இருநாட்டு எல்லையானது, சுமார் 3,323 கி.மீ., வரை உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நவீன வேலிகள் அமைக்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary:
NEW DELHI: India-Pak., On the border with various security features will be set as soon as the Union Home Minister of State for modern fences rijiju Kiran said.