புதுடில்லி : இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற பெயரில், வங்கிச் சேவையை துவக்கி உள்ளது.
வங்கி சேவை:
இது குறித்து, இவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரி, ஏ.பி.சிங் கூறியதாவது: முதற்கட்டமாக, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலும், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலும், வங்கிச் சேவைகள் துவங்கப்பட்டு உள்ளன. வங்கி, 25 ஆயிரம் ரூபாய் வரையிலான டிபாசிட்டுகளுக்கு, 4.5 சதவீத வட்டி வழங்கும். வங்கியில், 50 ஆயிரம் ரூபாய் வரையிலான டிபாசிட்டிற்கு, 5 சதவீதமும், 1 லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்டிற்கு, 5.5 சதவீதமும், வட்டி பெறலாம்.
திட்டம்:
இந்தாண்டு, செப்டம்பருக்குள், நாடு முழுவதும், 1.55 லட்சம் அஞ்சலகங்களை உள்ளடக்கிய வகையில், 650 வங்கிக் கிளைகளை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுத் துறை வங்கி என்பதால், தனியார் போலன்றி, குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே, வட்டி விகிதத்தை நிர்ணயிக்க முடியும். இருந்தபோதிலும், நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள அஞ்சலகங்கள் மூலம், வங்கிச் சேவையில் சிறப்பான வளர்ச்சி காண்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
English summary
NEW DELHI : The Indian Postal Department, under the name of Bank of India Post, payment, banking service is launched.