சென்னை : சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களிடமும் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
இடைக்கால நிவாரணம் வேண்டும் :
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரசாயன கழிவுகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் ரசாயனம் கலந்துள்ளதால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மீனவர்களுக்கு கப்பல் நிறுவனங்களே நிவாரணம் அளிக்கும் வகையில் வழக்கு நடத்தப்பட வேண்டும். கப்பல் விபத்து குறித்து தமிழக சட்டசபையில் மீன் வளத்துறை அமைச்சர் சரியான தகவல் அளிக்கவில்லை. இது அரசின் மெத்த போக்கையே காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English summary:
Chennai: Chennai-Ennore in waters contaminated by crude oil removal process is DMK leader MK Stalin was today examined in person. He inquired fisherman shortcomings in the area of residence.