புதுடில்லி: ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 6 வாரத்தில் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், கூபா என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
எதிர்ப்பு:
அப்போது விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016 உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றாலும், விசாரணை தொடர்ந்து நடத்த வேண்டும் எனக்கூறினர்.
அதிருப்தி:
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2014 ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மாறாக உள்ளது. ஜல்லிக்கட்டை சட்டத்தை விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பது ஏன் எனக்கேள்வி எழுப்பினர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக்கூறிய அவர்கள், வன்முறையை தடுக்க தவறியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், 2016 வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்ப பெற்றுக்கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி நீதிபதிகள் அனுமதி வழங்கினர். தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவும் அனுமதி வழங்கிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசிதழில்:
முன்னதாக, வழக்கறிஞர் மோகன் பராசரன், ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வரப்பட்டதன் வழிமுறையை எடுத்துக்கூறியதுடன், சட்டம் 2 நாளில் அரசிதழில் வெளியிடப்படும் எனக்கூறினார். . மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை இயற்றியுள்ளது எனக்கூறினார்.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்ஹி, கடந்த 2016ம் ஆண்டு அறிவிப்பாணையை திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.

English Summary:
NEW DELHI: The Supreme Court has denied a ban jallikattu interim legislation. Also ordered the state to respond by 6 weeks.