அவனியாபுரம் : மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு துவங்கி நடந்து வருகிறது. அமைச்சர் உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்றைய போட்டியில் 60 பேர் காயமுற்றுள்ளனர். இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தமிழக மக்களின் மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அமைச்சர் உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 916 மாடுகள் களமிறங்க உள்ளன. 721 மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க உள்ளனர். 4 கோயில் மாடுகளை தொடர்ந்து, வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் ஜல்லிக்கட்டு என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை காண ஏராளமான மக்கள் திரண்டு வந்துள்ளனர். மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கு மிக்சி, குடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
English Summary:
Avaniyapuram: Madurai district, in avaniyapuram jallikattu is going to start. Minister Uthayakumar was flagged. 60 injured in today's match. Two of them is in critical condition.