சென்னை: மாணவர்கள்; இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம், வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாத, பிரிவினைவாத எண்ணம் கொண்ட மாணவர்கள்; இளைஞர்கள் 700 பேர் மீது, தமிழக போலீசார் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, போலீஸ் வட்டாரங்களில் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றப்பட்டப் பின்னரும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் மாணவர்களோடு மாணவர்களாக போராட்டக் களத்திற்கு வந்துள்ள தீவிரவாத எண்ணம் கொண்டோர் பற்றிய தகவல் அரசுக்கு கிடைத்தது. இதனாலேயே, வலுக்கட்டாயமாக போலீசார், மாணவர்கள் போராட்டத்தை கலைக்க வேண்டியதானது.
சீர்குலைக்க திட்டம்:
இப்படி போராட்டக் களத்திற்கு வந்த தீவிரவாத எண்ணம் கொண்ட இளைஞர்கள், அடுத்து நடக்கவிருந்த குடியரசு தின விழாவையும் சீர்குலைக்கத் திட்டம் போட்டிருந்தனர். இந்த தகவல்கள் கிடைக்கவேதான், போலீஸ், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. இருந்தும், போலீசார் - பொதுமக்களை தீவிரவாத எண்ணம் கொண்ட போராட்டக்காரர்கள், தாக்கினர். இதனால் வன்முறை வெடித்தது. சென்னை, ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எரிக்கப்பட்டது. போலீஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன.
பொதுமக்களின் வாகனங்களும் தீக்கிரையாகின.
இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் உள்துறை முடிவெடுத்து, இந்த வன்முறை சம் பவங்களில் ஈடுபட்டதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 700 பேர் மீது வழக்குப் போட்டு, கைது செய்யும் தீவிரத்தில் உள்ளது. இவர்களின் பலர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை கைது செய்யும் தீவிரத்தில் உள்ளது தமிழக போலீஸ். விரைவில், அந்த 700 பேரும் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. வழக்கம் போல, இந்த போலீஸ் பட்டியலில், வன்முறை மற்றும் கலவரத்தை பார்வையிட்ட அப்பாவிகள் பலரின் பெயரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary:
Chennai: students; Jallikattu struggle waged by young people, ended in violence. This violent extremist, separatist-minded students; Over 700 young people, state police said that pointed Therefore, the police force, the students had to disperse the protest.